Saturday, April 11, 2009

கேள்வி பதில் ! (கொலைஞர் ஐயா பாணியில்...)

சினம் கொண்ட தமிழன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் ...

கேள்வி : திரு மு. கருணாநிதி அவர்கள் தான் உலக தமிழின மக்களின் தலைவரா ?
அப்படி என்றால் எந்த அடிப்படையில் அவரை அப்படி அழைக்கிறார்கள்? அது முறை தானா ?

பதில் : எனக்கு தெரிந்து அவர் தி.மு.க வின் தலைவர் மட்டுமே...அதுவும் அவர்கள் கட்சிக்கு உட்பட்ட தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு தலைவராக தேர்ந்தெடுத்ததால் ! உலக தமிழினத்திற்கென்று ஒரு தேர்தல் இல்லை... அவ்வாறு இருந்தால் அவர் போட்டியிட முடியுமா என்றால் அதற்கு தகுதி அடிப்படையில் தமிழ் மக்களின் மனசாட்சிகளை கேட்க வேண்டும். அவர்களே அப்படி அழைப்பதினால் அவர்கள் உலக தமிழின மக்களுக்கு தலைவனாக முடியுமா ? தற்போதைய சூழ்நிலையில் சூழ்ச்சிக்கு துணை சென்று வீர மற போராளிகளை வீழ்த்த துடியாய் துடிக்கும் தலைவிக்கு துணை நிற்கும் தலைவன். இனத்தை காப்பதை விட்டு பதவி மேல் பற்று வைத்து முரண்பட்டு பேசுகிறார்... அவற்றை நியாயப்படுத்துகிறார். இன மக்களின் நம்பிக்கையை உடைத்து முதுகில் குத்துகிறார். 
அவர் இழந்தது என்ன ? மக்களுக்கு (அவர் குடும்ப மக்களுக்கு அல்ல..) பெற்று தந்தது என்ன ? தராசு வெகுவாக பெற்றதன் பக்கம் சாய்வதாக அல்லவா எனக்கு தோன்றுகிறது..? அவரை தமிழ் அறிஞர் என்று வேணுமானால் கூறிக் கொள்ளலாம். 



Thursday, October 30, 2008

தமிழனின் அறியாமை !

தமிழன் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான எல்லா வழிகளையும் ஆராய்ந்து, அதன் படி செயல்பட்டு பணம் ஈட்டுவதிலும், செல்வந்தனாக வாழ்வதிலும் மட்டுமே குறியாக இருக்கிறான். தமிழுக்காகவொஎ தமிழினதிர்காகவொஎ சிந்திப்பதை அறவே மறந்து விட்டான்.

நன்கு படித்த தமிழக மேதாவிகள் கூட தமிழில் உரையாடுவது இல்லையே !
தமிழன் தமிழில் பேசாதது அவனது அறியாமை தவிர வேறொன்றும் இல்லை.
மாணவ பருவம் முடிந்து பணிக்கு செல்லும் அவன் காலப்போக்கில் சொரணை அற்று போகிறான். பொழுது போக்கிற்காக கன்றாவியான திரைப்படங்களை பார்பதும், தொலைக்காட்சி முன் உயிர் விடுவதுமாக இருக்கிறான்.

நல்ல புதினங்களை படிப்பதும், அறிவையும், உணர்வையும் மேம்படுத்த முனைவதில்லை. மாறாக தமிழன எதிரிகளுக்கு ஊக்கம் அளிப்பதாய் அவனது செய்கைகள் அமைந்து விடுகின்றன. அவன் அறியாமை மென்மேலும் வளர அடாது பாடுபட்டு ஊடகங்களும், கலைத்துறையினரும் அவன் நிலைமையை மென்மேலும் மோசமாக்குகின்றன.

தமிழன் தன்னுடைய கையொப்பத்தை என்று தமிழ் மொழியில் போட்டு இருக்கிறான். தாய் மொழிக்கான பற்று வீட்டிலிருந்து தாய் தந்தையர்களிடம் இருந்து தான் இது விதைக்க பெற வேண்டும். எத்தனை வீடுகளில் இது நடை முறையில் இருக்கின்றது ? தமிழை மறப்பது பெற்ற தாயை மறப்பது போல் அல்லவா.... பெற்ற தாய், இதை தன் பிள்ளையிடம் சொல்லி வளர்த்தால் அந்த குழந்தை எப்படி தமிழுனர்வில்லாமல் போவான்....?

ராஜராஜ சோழன் தமிழனின் புகழ் பரப்ப தனது வீரமிக்க் படை கொண்டு கடல் கடந்து சென்று நாடு வென்றான். அதை உலகிற்கு பறை சாற்ற வரலாற்றை எழுதி சென்றான். அவனுக்கு ஊக்கம் அவனது தமக்கை அளித்தது தானே ?

தமிழ் மொழிக்கான சிறப்பை அவனுக்கு அறிய வைப்பது சமுதாயத்தில் உள்ள சான்றோர்களின் கடமை. அவனது அறிவை மழுங்க அடிக்கும் செயல்களில் இருந்து அவனை மீட்டு சிறிதளவேனும் இன மான உணர்வை ஊட்ட வேண்டுவது படித்த நம் போன்ற இளைஞர்களின் பனி தானே ?

தமிழன் தமிழின் பெருமை அறிய முற்படவில்லை.... என்பது எனது குற்றச்சாட்டு. தமிழனின் பண்பாடு , வீரம் , கலை உணர்வு , மாந்த நேயம் போன்ற உலகத்தோரால் போற்ற பெற்ற நம்முடைய தொன்மை வாய்ந்த வரலாற்று ஆதாரங்களை மக்களுக்கு அறிய வைக்க முனைய வேண்டும்.

தமிழனுக்கு இன உணர்வு எங்கே போனது ? தமிழுணர்வு எங்கே போனது ?
தமிழனை தமிழன் ஆளவேண்டும் என்ற சிந்தனை ஏன் தமிழனுக்கு வரவில்லை ? தமிழம்ந பண்பாட்டை திருடி, மாற்று பெயர் இட்டு தமிழன் தலையில் எவ்வளவு நாட்கள் மிளகாய் அரைப்பார்கள் ?



வேறொரு தருணத்தில் இவற்றை பற்றி எழுத முனைவேன் ....

கருத்துக்களும், மாற்று கருத்துக்களும் வரவேற்கப்படும்.