Saturday, April 11, 2009

கேள்வி பதில் ! (கொலைஞர் ஐயா பாணியில்...)

சினம் கொண்ட தமிழன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் ...

கேள்வி : திரு மு. கருணாநிதி அவர்கள் தான் உலக தமிழின மக்களின் தலைவரா ?
அப்படி என்றால் எந்த அடிப்படையில் அவரை அப்படி அழைக்கிறார்கள்? அது முறை தானா ?

பதில் : எனக்கு தெரிந்து அவர் தி.மு.க வின் தலைவர் மட்டுமே...அதுவும் அவர்கள் கட்சிக்கு உட்பட்ட தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு தலைவராக தேர்ந்தெடுத்ததால் ! உலக தமிழினத்திற்கென்று ஒரு தேர்தல் இல்லை... அவ்வாறு இருந்தால் அவர் போட்டியிட முடியுமா என்றால் அதற்கு தகுதி அடிப்படையில் தமிழ் மக்களின் மனசாட்சிகளை கேட்க வேண்டும். அவர்களே அப்படி அழைப்பதினால் அவர்கள் உலக தமிழின மக்களுக்கு தலைவனாக முடியுமா ? தற்போதைய சூழ்நிலையில் சூழ்ச்சிக்கு துணை சென்று வீர மற போராளிகளை வீழ்த்த துடியாய் துடிக்கும் தலைவிக்கு துணை நிற்கும் தலைவன். இனத்தை காப்பதை விட்டு பதவி மேல் பற்று வைத்து முரண்பட்டு பேசுகிறார்... அவற்றை நியாயப்படுத்துகிறார். இன மக்களின் நம்பிக்கையை உடைத்து முதுகில் குத்துகிறார். 
அவர் இழந்தது என்ன ? மக்களுக்கு (அவர் குடும்ப மக்களுக்கு அல்ல..) பெற்று தந்தது என்ன ? தராசு வெகுவாக பெற்றதன் பக்கம் சாய்வதாக அல்லவா எனக்கு தோன்றுகிறது..? அவரை தமிழ் அறிஞர் என்று வேணுமானால் கூறிக் கொள்ளலாம்.